நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் - பன்னாட்டுக் கருத்தரங்கம்



  இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஆண்டுதோறும் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கினைச் சிறப்பாக நடத்தி வருகின்றது. இந்த ஆண்டிற்கான பன்னாட்டுக் கருத்தரங்கம் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2015 மேத் திங்கள் 16,17 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. பல்கலைக்கழகம், கல்லூரி, ஆய்வு நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்கலாம்.

பேராளர் கட்டணம்: உரூ. 700 - 00
உடன் வரும் விருந்தினர் கட்டணம்: உரூ. 200 – 00

  கட்டணங்களை All India University Tamil Teacher’s Association, Thanjavur – 613 010 என்னும் பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்தனுப்பிப் பதிவு செய்துகொள்ளலாம்.

கட்டுரைகள் பாமினி எழுத்துருவில் தட்டச்சு வடிவில் குறுவட்டுடன் அனுப்புதல் வேண்டும். கட்டுரை 5 பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும்.

  கட்டுரையும், வரைவோலையும் அனுப்ப இறுதிநாள்: 28. 02. 2015

தொடர்பு முகவரி:
முனைவர் சி. சுந்தரேசன் அவர்கள்,
செயலாளர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010, தமிழ்நாடு, இந்தியா

செல்பேசி எண்:  + 94425 38166 /  + 99433 78166

மின்னஞ்சல்: kalamdrsundaresan@gmail.com

கருத்துகள் இல்லை: