நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 6 பிப்ரவரி, 2008

பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளம் தமிழில்...

தமிழகப்பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு? என என் பதிவில் 2007 திசம்பர் 19 இல் ஒரு பதிவு இட்டிருந்தேன்.அதன் பயனைக்கண்டு மகிழ்கிறேன்.
ஆம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணையதளம் உலகத்தமிழர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் தமிழிலும்,பிற மொழியினருக்குப் பயன்படும் வண்ணம் ஆங்கிலத்திலும் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்தித் தமிழகத்தின் பிற பல்கலைக் கழகங்களும் தமிழிற்கு மாற வேண்டும் என்பதே நம் விருப்பம். இணையதளத்தைத்
தமிழில் வெளியிடும் வண்ணம் ஆணையிட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராகவும் தமிழ் இணையத்துறையின் மூல ஊற்றாகவும் பணிபுரியும் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுக்கும் ஆட்சிக்குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியவாகட்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.

3 கருத்துகள்:

Osai Chella சொன்னது…

நன்றி.. ஆனாலும் ஊரோடு ஒத்துவராத வீம்பு.. ஒருங்குறியேதுமின்றி பல்லிலிக்கிறது.. டேப் டேமில்..

Thamizhan சொன்னது…

ஒரு துணை வேந்தர் என்ன செய்துவிட
முடியும் என்பதற்குப் பதிலளிக்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்து வரும்
பெருமைமிகு.பொன்னவைக்கோ
அவர்கட்குப் பாராட்டுகள்.
ரசிய தமிழாசிரியர் ரசிய தமிழ்த்துறை பற்றிப் பேசியதும்,பாரதிதாசன் பல்கலைத் தொடர்பும் வரவேற்கத் தக்கது.
மற்ற சப்பானிய,சீனத் தமிழாசிரியர்களையும் வர வழித்துத்
தொடர்புகள் செய்து பல்கலைக் கழகங்களிலே தமிழ் தொடர்பு உண்டாக்குவது நல்லது.

நண்பர்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை வழ்ங்கி உதவுவது அனைவர்க்கும் நல்லது.